மன்னார் மாவட்டத்திற்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இருதய வைத்திய நிபுணர் பானு தில்லையம்பலம் முதன்முறையாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் MD இனை முடித்து வெளிநாட்டில் மேலதிக பயிற்சியை முடித்து இரண்டு வாரங்களின் முன் நாடு திரும்பி இருந்தார்.

இந்த நிலையிலேயே இவர் மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.