மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய மாணவர்கயைத் தாக்கிய மின்னல்- ஒருவர் சாவு மற்றொருவர் படுகாயம்

முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவர்கள் மீது தாக்கியுள்ளது.

சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்தார்.

மேலும் எஸ்.கிரிஷாந்தன் என்ற மாணவன் காயமடைந்தார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.