மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகிய இரண்டு அதிகாரிகளின் சடலங்களை ஏற்றிய சிறப்பு விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் தரையிறங்கியது.

அதையடுத்து, மாலியில் ஐ.நா அமைதிப்படையின் தளபதி, லெப்.ஜெனரல் டெனிஸ் கிலெஸ்போர், ஐ.நா கொடியினால் போர்த்தப்பட்ட சடலங்கள் அடங்கிய பெட்டிகளை சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கையளித்தார்.

சிறிலங்காவுக்கான ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, மற்றும் படைத் தளபதிகள், அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தில் சிறிலங்கா படையினரின் உடல்களுக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், உடற்கூற்று பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன.