இந்திய- இலங்கை இராணுவத்தினருக்கு இடையில் இரண்டு வாரங்களாக நடந்து வந்த ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

இந்திய – இலங்கை இராணுவத்தினர் ஆண்டு தோறும் நடத்தி வரும் ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியின் ஆறாவது கட்டம், தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ முகாமில் இடம்பெற்று வந்தது.

மார்ச் 26ஆம் திகதி ஆரம்பித்த இந்தக் கூட்டுப் பயிற்சி நேற்று முடிவடைந்தது.

14 நாள்கள் நடந்த இந்தக் கூட்டுப் பயிற்சியில், நகர மற்றும் கிராமப் புறங்களில் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை செயற்படுத்துவது தொடர்பான பயிற்சிகளில் இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும் தலா 120 இராணுவத்தினர் பங்கேற்றனர்.