பிக்பாஸ் வீட்டில் நேற்று மதுமிதாவால் பெரிய பிரளயமே வெடித்தது. இந்த வாரம் பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்கில் சரியாக செய்யாதது யார் என்கிற வாக்குவாதம் நடந்தது. அப்போது போட்டியாளர்கள் பலரும் கஸ்தூரி மற்றும் அபிராமி ஆகியோரின் பெயரை தான் தேர்ந்தெடுத்தனர்.

அவர்களும் ஜெயிலுக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என கூறி கவினிடம் வாக்குவாதத்தில் இறங்கினார் மதுமிதா. அப்போது அவரது குரல்தான் உச்சத்தில் இருந்தது. போட்டியாளராக வனிதா இருந்தபோது எப்படி கத்துவாரோ அதேபோல் மதுமிதாவும் நடந்து கொண்டார். கடந்த வாரம் கமல் வருகையின் போது மதுமிதாவிடம் ஒருவர் போனில் முன்பு இருந்த மதுமிதாவுக்கும், இப்போது இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கே. நடிக்கிறீர்களா என்று கேட்டதும் குறிப்பிடத்தக்து.

அதை மனதில் வைத்து இப்படி ஒரு பிரளயத்தை கிளப்பி இருக்கிறாரோ என்று ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர்.

இந்த பிரச்சனையெல்லாம் முடிந்தபிறகு மதுமிதா, சேரன் மற்றும் வனிதா ஆகியோர் கிட்சனில் பேசிக்கொண்டிருந்தனர். அதை வெளியில் கார்டனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சாண்டி மற்றும் கவின் அவர்களுக்கு டப்பிங் கொடுத்து காமெடியாக பேசினர். இதை சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அபிராமி, ‘பத்ரி படத்தில் வருவது போல பண்றீங்களா?’ என கேட்டு சிரித்துவிட்டார்.