ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் ஆக்‌ஷன் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆம்பள’. இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. இதில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரபு, சந்தானம், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

காமெடி, ஆக்‌ஷன் கலந்து உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விஷால், சுந்தர்.சி, ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் புதிய படம் மூலம் இணைந்துள்ளார். இந்த புதிய படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.