மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் கவினிடம் பொறுப்பை விட்ட கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜொலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியின் தர்ஷன் பேசியபோது, ‘நான் மீராவை புரபோஸ் செய்ததாக ஷெரின் கூறியதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட மீரா, நாம ஒண்ணு சொன்னால், அது வேறமாதிரி திரிச்சு திரிச்சு போய் வேற மாதிரி போய், வேற மாதிரி வெளில வந்துருது என்று கூறிய மீரா அதன்பின்னர் ‘நான் யார்கிட்டப்பா அவனை கல்யாணம் பண்ணப்போறேன்னு சொன்னேன்’ என்று ஆதங்கத்திடம் தெரிவித்தார்.

அப்போது கமல், ‘இந்த மாதிரி பிரச்சனைகளுக்கெல்லாம் கவின் தான் சரியான தீர்வு காண்பார். எனவே இந்த பிரச்சனையை அவரிடம் விட்டுவிடுவோம்’ என்று கூற, திகைப்பில் மூழ்கிய கவின், ‘சார் நான் என் பிரச்சனையையே தீர்க்க முடியாம ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்கேன்’ என்று காமெடியாக சொல்ல கமல்ஹாசன் உள்பட சக போட்டியாளர்களும் பார்வையாளர்களும் சிரித்தனர்.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் இருந்தாலும் ஜொலியாக இருக்கும்போல் தெரிகிறது. இருப்பினும் அடுத்த புரமோவை பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்.