முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி

பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பாக கற்கைநெறியில் சிறப்பு பெறுபேற்றை பெற்று, பயிற்சிக்காக விண்வெளி ஓடத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

பிரித்தானியாவில் சுமார் 30,000 மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் நில அளவை செய்வது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கற்று வருகிறார்கள்.

இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்சி மையம் முடிவெடுத்திருந்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஈழத் தமிழ் மாணவி சியோபன் ஞானகுலேந்திரன்.

இவர் நுண்ணியல் உயிர்களைப் பற்றிய கற்கையில் சிறப்பு பெறுபேற்றை பெற்றுள்ளார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். இங்கிலாந்து மாணவி டியானாவும் இவரும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பப்பட்டு, நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர்.