முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கேப்பாப்புலவிலுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகத்திற்கு அண்மையாக இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றது.

இராணுவத்தின் கப் ரண வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. வளைவொன்றில் திரும்ப முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றது. இதில் சம்பவ இடத்திலேயே சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.

காயடைந்த சிப்பாய்கள் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.