ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களை புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும். அதைவிட அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை அரசியலமைப்பை மீறியிருக்கிறார். தொடர்ந்தும் அத்தகைய மீறல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவை அவர் பதவிநீக்கம் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. மகிந்த ராஜபக்சவை அவர் பிரதமராக நியமித்ததும், அரசியலமைப்பு மீறல். நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டதும் அரசியலமைப்பை மீறிய செயல்.

இந்த அரசியலமைப்பு மீறல்களால் அவர் குடியுரிமையையும் இழக்கும் நிலை ஏற்படும்.

ஜனாதிபதி குற்றவிசாரணைப் பிரேரணை ஒன்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.