ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது, இன அழிப்பு குற்றச்சாட்டுக்கள் மீது சர்வதேச விசாரணையேவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமாகி முற்றவெளியை சென்றடைந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்து மக்கள் பங்கு கொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

‘இன அழிப்பு குற்றச்சாட்டுக்கள் மீது உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரிக்கப்படவேண்டும், தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் ஏந்தியிருந்தனர்.