யாழில் வெளிநாடுகளுக்கான விமான சேவை முகவர் நிறுவனத்தால் பல லட்சம் ரூபா மோசடி – பொலிஸில் சரணடைந்த முகாமையாளர்

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர்.

அதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றி பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்து வந்துள்ளார். முகாமையாளர் வந்த்தால்தான் பணத்தை மீள வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இமு தொடர்பாக இன்று முறைப்பாடும் அளிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் முகாமையாளர் இன்று பொலிஸில் ஆஜராகியுள்ளார். அத்துடன் இது முதற் தடவை அல்ல முன்பும் இது போன்ற ஏமாற்று வேலையின் மூலம் இந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.