யாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் இளம் குடும்பப் பெண் ஒருவரை சுன்னாகம் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடுவில் மல்வம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக சுன்னாகம் பொலிசாருக்கு இரகசிய தகவல்கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே இடத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணின் கைப்பையில் இருந்து 8 கிராம் கெரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் கடந்த வருடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.