யாழ்ப்பாணத்தில் காணாமல் போன வீதி – குளியலறையாக மாறிய அதிசயம்

சிட்டிசன் என்று ஒரு இந்திய தமிழ்த் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது.

யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதியென்று காணாமல் போயுள்ளது.

ஜிம்மா பள்ளிவாசல் வீதியையும், காங்கேசன் துறை வீதியையும் (KKS Road) இணைக்கும் வீதியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

1997 ஆம் ஆண்டு இராணுவத்தினாரால், இவ் வீதி பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது.

பின்னர் இவ்வீதி தனியாரால் வீதியின் இருபக்கமும் கேற் அமைத்து மூடப்பட்டது.

கேற் அமைத்த பிற்பாடு அந்த வீதியில் தனியாரினால் அத்துமீற கட்டிங்கள் கட்டப்பட்டன, மலசகூடம் குளிப்பதற்கு ஏற்ற இடங்கள் என்பன காலப்போக்கில் அமைக்கப்பட்டன.

அது மட்டுமின்றி யாழ் நகர புடைவைக் கடையொன்றின் பாரிய மின்பிறப்பாக்கி ஒன்றும் அவ் வீதியில் அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ் மாநகர சபை மேஜர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தவை வருமாறு,

சபை அமர்விலும் இது தொடர்பாக விடயங்கள் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாக நாங்கள் இது தொடர்பான தரவுகளை ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் இது தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.