யாழ்ப்பாண மாநகரை அண்டியுள்ள சிறுத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபாயகரமான வெடிபொருள்கள் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

படையினருடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.

98 டெனினேட்டர்கள், 12 கிலோ சி.4 வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பாக பொதி உள்ளிட்ட உபகரணங்கள் என்பன என்பன புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் கூறினர்.

கடற்படைப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அனைத்து புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டமற்ற இந்த தீவில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல கோணங்களிலும் விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.