முப்படைகள் , பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழைக்குள்ளும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலர் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இராணுவம் , கடற்படை, விமான படையினரின் அணி வகுப்புடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன், மத தலைவர்கள், முப்படைகளின் பிரதானிகள் , உயர் அதிகாரிகள் , பொலிஸ் உயர்அதிகாரிகள் , முப்படையினர் , பொலிஸ் , மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் ஆரம்பித்து சில நிமிடங்களில் மழை கொட்டிய போதும் மழைக்குள்ளும் நிகழ்வுகள் நடைபெற்றன.

வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்துவதாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் அறிவித்திருந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக சுதந்திர தினம் வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.