இலங்கையின் சுதந்திரதினமான இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அத்தோடு பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. கரிநாள் பிரகடனத்துக்கான வாசங்கள் பொறித்த பதாதைகளும் கட்டப்பட்டுள்ளன.

இலங்கையின் 71 ஆவதுசுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும்நடைபெற்று வருகின்றன. அத்துடன், தேசியக் கொடி பறக்கவிடுமாறு அரசு அறிவித்திருந்தது.

எனினும் 71 ஆண்டுகளாக தமிழர்கள் டக்குமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தி வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் இன்றைய தினம் கரிநாளாகப் பிரகடனம் படுத்தி கறுப்புக்கொடி கொடிகள்பறக்கவிடப்பட்டது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.