யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை இயந்திரத்தை வாங்க அமைச்சரவை ஒப்புதல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ( Magnetic resonance imaging ) இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மூளை மற்றும் மத்திய நரம்புக் கட்டமைப்பில் பல்வேறு நோய் நிலமையைப் போன்று மார்பு மற்றும் இருதய நோய் நிலமையை அறிந்து கொள்வதற்கான ஆய்வில் எம்.ஆர்.ஐ பெற்றுக்கொள்வதற்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயந்திரத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு பெறுகைக்குழு அமைச்சரவையினால் நிலையியல் பெறுகைக்குழு மற்றும் பெறுகை மேல்முறையீட்டு சபையின் பரிந்துரைக்கமைய 1.65 மில்லியன் அமெரிக்க டொலர்களில் டிமோ தனியார் நிறுவனத்தில் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அத்துடன், அந்த இயந்திரத்தை 2 வருட காலத்திற்குப் பின்னர் மேலும் 5 வருடத்திற்கு பராமரிக்க 2,96,231 அமெரிக்க டொலர்களுக்கு சேவை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான உடன்படிக்கையை இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்வதற்காகவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்ன முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.