நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. நாளாக நாளாக தேர்தல் பரபரப்பு சூழ்ந்து வருகிறது. ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஓப்பனாக கூறிவிட்டார். அதே வேளையில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு இயக்குனர் சுசீந்திரன் “தலைவா நாங்க காத்திருக்கோம். வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக இருக்க முடியும்” என  ஆதரவளித்துள்ளார்.