லவ்வாவது மண்ணாங்கட்டியாவது! தூக்கி குப்பையில போடுங்க: வனிதா அதிரடி

பிக்பாஸ் வீட்டில் முதல் இரண்டு வாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வனிதா, கோபமாக, அதிரடியாக பேசினாலும், அவரது பேச்சில் ஒரு நரித்தனம் இருக்காது. மனதில் தோன்றுவதை உடனே பளிச்சென வெளியில் கூறும் வழக்கமுடையவர். அவர் கூறும் பாணி தவறாக இருந்தாலும் அவர் பெரும்பாலும் நியாயத்தையே பேசினார். இருப்பினும் மற்றவர்களின் கருத்தை அவர் முயற்சிக்கக்கூட இல்லை என்பதால் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சிறப்பு விருந்தினராக இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள வனிதா மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். முதலில் லாஸ்லியாவில் தொடங்கிய வனிதா, ‘லாஸ்லியா யார் என்பதை நீயும் கண்டுபிடிக்கலை, நானும் கண்டுபிடிக்கலை என்று கூறிவிட்டு பின்னர் கஸ்தூரியிடம் ‘நான் உங்களிடம் மாலை மாற்றும் படலத்தை எதிர்பார்க்கவில்லை என்று கூற அதற்கு கஸ்தூரி அவர்கள் இருவரும் லவ் பண்றாங்க என்று தெரிவித்தார்.

உடனே வழக்கம்போல் இடைமறித்த வனிதா, ‘ல்வ்வாவாது மண்ணாங்கட்டியாவது எல்லாத்தையும் தூக்கி குப்பையில் போடுங்க. கவின் உங்கிட்ட நிறைய பேசனும்ன்னு நினைச்சேன், உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்றேன், நீ வொர்த் இல்லை’ என்று முகத்தில் அடித்தால்போல் பட்டென்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஒருசில நிமிடங்களில் படபடவென பொறிந்து தள்ளும் வனிதாவின் பேச்சில் நியாயம் இருப்பதை ஹவுஸ்மேட்ஸ் தற்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிகிறது