வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று முற்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அவர் இன்று முற்பகல் 10 மணிக்கு வருகை தந்தார்.

அவரை ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் உள்ளிட்டவர்களும் வடக்கு மாகாண ஆளுநர்   சுரேன் ராகவனின் வரேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண தனியான நிர்வாக அலகாக நிறுவப்பட்டதன் பின்னர் முதலாவது தமிழர் மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ளார்.