வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று .இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

கலாநிதி சுரேன் ராகவன் நேற்று முன்தினம் பிற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

அவர் ஆளுனராக நியமிக்கப்பட்ட பின்னர், முதலாவது அதிகாரபூர்வ சந்திப்பு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண ஆளுனராக சுரேன் ராகவன் இன்னமும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளதை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது