வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவருக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டது.

கலாநிதி சுரேன் ராகவன், கடந்த நவம்பர் மாதம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி சுரேன் ராகவன், பத்தி எழுத்தாளரும் அரசியல் விமர்சகராகவும் செயற்படுபவர்.

வடக்கு மாகாண ஆளுனராக, தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், ஊவா மாகாண ஆளுநராகவும், மூத்த விரிவுரையாளர் தம்ம திசநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.