வடமராட்சி கிழக்கு பனிக்கையடி பகுதியில் கைவிடப்பட்டநிலையில் காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றினுள் இருந்து வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதை – பனிக்கையடியில் இன்று நண்பகல் இந்த வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப் பாதை வழியாக சென்றவர்கள் அனாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்ட போது, அதற்குள் துருப்பிடித்த பழமையான நிலையில் இரண்டு மிதிவெடிகள் மற்றும் கைக்குண்டு என்பன காணப்பட்டன.

இதனையடுத்து பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.