எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இ வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று முற்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதில் மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் உள்ளிட்டவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வரேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண தனியான நிர்வாக அலகாக நிறுவப்பட்டதன் பின்னர் முதலாவது தமிழர் மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ளார்.

பதவியேற்றதன் பின்னர் வெளியிட்டுள்ள முதலாவது உரையிலேயே,திர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும். என்று தெரிவித்துள்ளார்.