வனிதா வெளியேறுகிறாரா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஜூலி, பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் வனிதா ஆகியோர் குறைந்த நாட்களிலேயே அதிக நபர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டவர்கள். பார்வையாளர்கள், சக போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் ஆகியோர்களுக்கும் வனிதாவின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. குறிப்பாக அவர் நேற்று முன் தினம் மைக்கை கழட்டி எறிந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறியது ஆகும்

ஆனாலும் வனிதா வீட்டில் இருந்தால் சுவாரஸ்யமும், பரபரப்பும் அதிகமாக இருக்கும் என்பதால் பிக்பாஸ் அவரை வெளியேற்ற மாட்டார் என்றே பரவலாக கூறப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த பார்வையாளர்களும் வனிதாவுக்கு எதிராகவே உள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் ஒரு குரல் கூட ஒலிக்கவில்லை என்பதால் அவரை காப்பாற்றினால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையில் பெருத்த சந்தேகம் வரும் என்பதையும் பிக்பாஸ் கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. எனவே பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் வனிதாவை பிக்பாஸ் வெளியேற்றலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின்படி வனிதா வெளியேறிவிட்டதாகவே கூறப்பட்டாலும், நேற்று மோகன் வைத்யாவுக்கு ஒரு டுவிஸ்ட் கொடுத்தது போல் வனிதாவுக்கும் ஒரு டுவிஸ்டை கமல் கொடுப்பாரா? அல்லது வனிதாவை வெளியேற்றிவிட்டு தனியறையில் சில நாள்;கள் வைத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்