இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதல்தடவையாக தேசிய சம்பியனாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் நேற்றுகண்டானை டி மசினோட் கல்லூரியில், கொழும்பு தர்மபாலா கல்லூரியை எதிர்த்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி, 74 : 39 என்ற புள்ளிக் கணக்கில் புள்ளிகளைப் பெற்று , அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இத் தொடரின் சிறந்த “Offensive Player” ஆக யாழ் இந்துவின் சஞ்சயன், தொடரின்  Most Valuable Player ஆக கீர்த்தனன்  தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கூடைப்பந்தாட்ட வரலாற்றில் வடமாகாணத்தை சேர்ந்த 19 வயதுப்பிரிவு அணி ஒன்று முதல் தடவையாக தேசிய மட்டத்தில் சம்பியனாகியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தொடரில் 3ஆம் இடத்தை மற்றொரு யாழ் மாவட்ட அணியான கொக்குவில் இந்து அணி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது