வவுனியா மயிலங்குளத்தில் கைக்குண்டு மீட்பு!

வவுனியா மயிலங்குளம் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மயிலங்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு காணப்படுவதாக விறகு வெட்டுவதற்குச் சென்ற சில நபர் வழங்கிய தகவலையடுத்து மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற படையினர் கைக்குண்டை மீட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.