விற்பனைக்கு வந்த உலகின் முதல் 1TB மைக்ரோ எஸ்.டி. கார்ட்

ஸ்மார்ட்போனின் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சன்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டை விற்பனை செய்கிறது.

புதிய மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் சாதனத்தில் அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும். முன்னதாக இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது அமேசான் தளத்தில் 450 டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.31,540) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சான்டிஸ்க் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டு ஆன்லைன் மட்டுமின்றி ஒஃப்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 512 ஜி.பி. எஸ்.டி. கார்டை விட இருமடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது உலகின் முதல் 1 டி.பி. எஸ்.டி. கார்டு ஆகும்.

தற்சமயம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஒன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.