விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித்தின் ரசிகை ஆகிவிட்டேன் – பிரபல நடிகை

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் முதல் ஹிட் படம். நகரத்தை விட இப்படம் கிராம புரங்களில் செம மாஸாக ஓடியது.

திரையரங்கிற்கு பல வருடங்கள் கழித்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்த்ததாக திரையரங்க உரிமையாளர்களே பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் ரசிகர்களின் பேவரெட் படமாக அமைந்துவிட்டது.

அண்மையில் நடிகை நந்திதா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது பிடித்த ஹீரோ யார் என்று கேட்க அதற்கு அவர், தற்போது தல அஜித், விஸ்வாசம் படத்திற்கு பிறகு பேவரெட் என பதிவு செய்துள்ளார்