வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குளோரோபோம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் உருவாகின்றன.

அவற்றைத் தடுக்க அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை அதிக அகலம் உடையது. இது   புரோட்டினை வெளிப்படுத்துகிறது.

இதன்மூலம் வீட்டிற்குள் வெளியாகும் நச்சு வாயுக்களை நீக்கி அறையின் சுற்றுச்சூழலை மாசுவில் இருந்து தடுக்கிறது.