ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்கவிருப்பவர்களின் பெயர் விவரங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள் ​அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் செல்லும் அந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

அவர்களுடன் ஐ.நாவிலுள்ள இலங்கைக்கான நிரந்த வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரும் இணைந்துகொள்வர் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியும், அரசாங்கமும் தனித்தனியாக தூதுக்குழுக்களை அனுப்புவதாக ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்ட நிலையில், தற்போது இரு தரப்பும் இணக்கத்திற்கு வந்து, இரு தரப்பையும் உள்ளடக்கிய குழுவொன்று அனுப்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.