வேலை இல்லாமல் வேலையை தேடி அலையும் வி.ஐ.பி-க்கள் அதிகம் என்பது உண்மை தான். என்றாலும் வேலையில் உள்ள சில நபர்கள் எப்போதுமே பிசியாகவே இருப்பார்கள். அல்லது பிசியாக காட்டி கொள்வார்கள். என்ன பண்ணுற? அப்படினு கேட்டா, பலரின் தற்போதைய பதில் ‘பிசியாக இருக்;கிறன்’ என்பது தான். இப்படிப்பட்ட பதில்கள் நம்மை எரிச்சல் அடைய செய்தாலும் பல சமயங்களில் இது உண்மையாகவும் உள்ளன.

நாம் சும்மா இருந்தாலோ அல்லது வேலையில் இருந்தாலோ சில விஷயங்களை செய்யவே கூடாது. முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் நாம் உஷாராக இருத்தல் அவசியமானது. வேலை நேரங்களில் வேலையை விட பலர் நொறுக்கு தீனிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவ்வாறு நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடியதாக இருக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வேலை நேரத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் மோசமான பக்க விளைவு உண்டாகும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

கோப்பி


நேரம் காலம் தெரியாமல் கோப்பி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. வேலை நேரத்தில் அதிக அளவு கோப்பி குடித்தால் அது மோசமான பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக செரிமான கோளாறு, பசியின்மை, உடல் எடை முதலிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். 1 நாளைக்கு 1 கப் காபியே அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிஸ்கட்ஸ்

தினமும் 1 பிஸ்கட் பாக்கெட்டை காலி செய்யும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், இது போன்ற உணவுகள் சுவையை தந்தாலும் உங்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், பசியின்மை போன்றவை இதனால் கிடைக்கும் பாதிப்புகள்.

சிக்கன்
துரித உணவகங்களின் தாக்கம் தான் நம்மை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சிலர் வேலை நேரத்தில் எதையவது ஓடர் செய்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். குறிப்பாக வறுத்த சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவை இவர்களின் பிரதான தேர்வாக இருக்கும். ஆனால், இதனால் கிடைக்கும் பாதிப்பே அதிகம். எனவே இது போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

கேக்குகள்

ஒரு சாதாரண கேக்கில் 10-12 கிராம் அளவு கொழுப்பும், 300-400 அளவு கலோரிகளும் உள்ளதாம். ஆதலால், இதை சாப்பிடுவோருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து நெருங்கி வருகிறது என்பது உறுதி. எப்போதாவது 1 பீஸ் சாப்பிடுவதில் தவறில்லை.

சொக்லேட்

தூக்கம் வர கூடாது என்பதற்காக இந்த சொக்லேட் ஆயுதத்தை பலரும் கையில் எடுத்து கொள்வார்கள். ஆனால், கொக்கோ அதிகம் நிறைந்த சொக்லேட்டுகளை தவிர மற்ற சொக்லேட்டுகள் உடலுக்கு தீங்கு தருபவை. குறிப்பாக கலர் கலராக உள்ளவற்றைச் சொல்லலாம். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். எனவே, மேற்சொன்ன உணவுகளை வேலை நேரத்தில் தவிர்ப்பது உங்கள் உடலை நோய்கள் இல்லாமல் வைத்து கொள்ளும்.

பாப்கார்ன்

வேலை நேரத்தில் பாப்கார்ன் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு ஆபத்து காத்துள்ளது என்பதே உண்மை. மைக்ரோவேவ் பாப்கார்ன்கள் மிகவும் அபாயகரமான தன்மை கொண்டவை. இதனால் புற்றுநோய் கூட உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.