ஹபாயாவுடன் ஆண் – வத்தளையில் பதட்டம்-நையப்புடைத்த மக்கள்

கொழும்பு- வத்தளை பகுதியில் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த நபா் ஹபாயா ஆடையுடன் பொதுமக்கள் முன்னிலையில் நடமாடியுள்ளா்.

இதனை அவதானித்த பொதுமக்கள் சந்தேகமடைந்து சோதனையிட்டபோது ஆண் ஒருவா் அந்த ஆடையை அணிந்துள்ளதை அறிந்து அவரை நையப்புடைத்ததுடன், பொலிஸாரிடம் ஒப்படைத்தனா்.