ஹிஸ்புல்லா மற்றும் றிசார்ட்டுக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான்
குணசேகர கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.