ஹேய் கூகுள்… முட்டை ஏன் இப்படி இருக்குது – இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்ளை! (VIDEO)

கூகுள் தான் இன்றைய இளைஞர்களின் நண்பன். எதற்கெடுத்தாலும் கூகுளை தேடும் நபர்கள் ஏராளம். இதற்காக கூகுள் நிறுவனம் தொடர்ந்து தன்னை அப்பேட் செய்து வருகிறது. உலகில் உள்ள பல தரப்பட்ட மக்களின் டேட்டாக்கள் கூகுள் வசம் தான் இருக்கிறது. நம்முடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை கூகுள் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கணினியில் வரும் விளம்பரங்கள். இணையத்தில் நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது தொடர்பாக விளம்பரங்கள்தான் உங்கள் கணினியை ஆக்கிரமிக்கும். சரி விஷயத்திற்கு வருவோம்.

கூகுளில் இருக்கும் வொய்ஸ் அசிஸ்டென்ட் நமக்கு தெரிந்த ஒன்று. இந்த வொய்ஸ் அசிஸ்டென்டைப் பயன்படுத்தி ஒருவர் செய்த சேட்டைதான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் தட்டில் இருக்கும் முட்டைகளை காண்பித்து ஹேய் கூகுள்.. நான் முட்டையை உடைத்தேன் அந்த முட்டையில் இரண்டு மஞ்சள் கரு இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்கிறார். அதற்கு கூகுள் ‘ உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப்போகிறது’ என்றது.

கூகுள் எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல என நக்கலாக பதிலளித்தார். அதற்கு கூகுள் ‘ உங்கள் வீட்டில் ஒருவர் இறக்கப்போகிறார் என்று அர்த்தம்’ என்றது. அந்த நபரின் முகமே மாறிவிட்டது. இவையணைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.