4 முக்கிய வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடிக்கும்படி பொலிஸார் மற்றும் சி.ஐ.டிக்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய வழக்குகளான வசிம் தாஜூடீன், லசந்த விக்ரமதுங்க கொலை, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொல்லப்பட்டது, மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் கொல்லப்பட்ட வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.