நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ!

#Pray_for_Neasamani நேசமணி என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டாகியுள்ளது. பிரன்ட்ஸ் படத்தில் இடம் பெறும் வடிவேலுவின் கதாபாத்திரம்தான் இந்த நேசமணி.

நேசமணியின் அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆணி பிடுங்கும் போது சுத்தியலை நழுவவிட்டதால் அந்த சுத்தியல் நேசமணியின் தலையில் விழுந்தது.

உண்மை சம்பவம் போல படம் வந்துபோய் 18 ஆண்டுகள் கழித்துவிட்டது. இப்போது அந்த நகைச்சுவையை எடுத்து உண்மை சம்பவம் போல ட்ரென்ட்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதுவும் உங்க வீட்டு ட்ரென்ட்டு எங்கவீட்டு ட்ரென்ட்டு இல்லை உலக ட்ரென்ட்.

நேசமணி யாரோ உண்மையான நபர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என எண்ணி Pray for Nesamani என உலகமே ட்ரென்ட் செய்து வருகிறது. அவற்றில் டிவிட்டுகள் உங்கள் பார்வைக்கு

நேசமணி ஆர்மி

நேசமணி விரைவில் நலம்பெறுவதற்காக நேசமணி ஆர்மியை சேர்ந்தவர்கள் ரத்தம் கொடுக்கிறார்கள்.

நேசமணி பிழைத்துவிட்டார் கடைசியாக நமது பிரார்த்தனை வேலை செய்துவிட்டது. நேசமணி பிழைத்துவிட்டார். அவர் செய்த முதல் வேலை முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார். உதவி செய்யுங்க மக்களே..

நல்ல நடன கலைஞர் ஒரு காலத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு…நேசமணி ஒரு நல்ல நடன கலைஞர்

 

தப்ப முடியாது 18 வருடங்கள் கடந்தாலும் ,தவறு செய்துவிட்டு தப்ப முடியாது என்பது #Nesamani விஷயத்தில் நன்றாக மக்களுக்கு புரிந்திருக்கும்.