தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. 10-க்கும் குறைவான கதாநாயகர்களே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகுடன் ஒப்பிட்டால் இது குறைவு.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 171 படங்கள் ரிலீசாகி உள்ளன. கதாநாயகர்களில் விஜய் சேதுபதி அதிகபட்சமாக 7 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகியவை கதாநாயகனாக நடித்தவை. டிராபிக் ராமசாமியும், இமைக்கா நொடிகளும் கவுரவ வேடத்தில் நடித்தவை.

அவருக்கு அடுத்து பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர் தலா 3 படங்களிலும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் தலா 2 படங்களில் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.