2019 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவராக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி விபரம்,

திமுத் கருணரத்னே, ஏஞ்சிலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, குசல் பெரேரா, லஹிரு திரிமன்னே, அவிஸ்கா பெர்ணாண்டோ, குசல் மென்;டீஸ், தனஞ்செய டி சில்வா, ஜெப்ரி வாண்டர்சே, திசேரா பெரேரா, இசுரு உடனா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டீஸ், மிலிண்டா சிரிவர்டனா.