5000 ரூபா போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இளைஞர்கள் இருவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை (10) சந்தேகநபர்கள் இருவர்
கைதுசெய்யப்பட்டனர்.

“வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் இருவரும் 5000 ரூபா பெறுமதி
பொறிக்கப்பட்ட 20 போலி நாணயத்தாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் ரெஜிகேசனுக்கு கிடைத்த தகவலின்
பிரகாரம், புலானய்வுத்துறை உத்தியோகத்தர் மற்றும் ஜெயந்தன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி
பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.