அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களில் 5ஆயிரத்து 910 பேர் 100 வயது நிரம்பியவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களில் 5ஆயிரத்து 910 பேர் 100 வயது நிரம்பியவர்கள். 90 வயது முதல் 99 வயது வரை 89 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தத் தகவலை அரியானா மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்திரஜித் நேற்று வெளியிட்டுள்ளார்.