யாழ்ப்பாணத்தில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய போது அங்கிருந்து நல்லூர் , முடாமவடி , கோப்பாய் பகுதிகள் என ஆறு விபத்துக்களை ஏற்படுத்திய அந்தக் காரை இணுவில் ரயில் நிலைய பகுதியில் நிறுத்திவிட்டு அதன் சாரதி தப்பிசென்றுள்ளார்.

இந்த விபத்துக்களில் குடும்ப பெண்ணொருவர் , சிறுமி உள்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். சாரதியைத் தேடும் முயற்சிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.