ஆப்பிள் நிறுவனம் புதிதாக 6K டிஸ்ப்ளே ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது புரோபஷனல் கிரேடு தரத்தில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய டிஸ்ப்ளே 31.6 இன்ச் அளவில் இருக்கும் என்றும் இதில் வைடு கலர் கமுட் மற்றும் அதிக கான்டிராஸ்ட் இருக்கும் என்றும் தெரிகிறது. புதிய டிஸ்ப்ளேவினை கொண்டு ஆப்பிள் மினி-எல்.இ.டி. பேக்லிட் தொழில்நுட்பத்திற்கு மாறுவதை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது.

இதே தொழில்நுட்பம் எதிர்கால மேக்புக் மற்றும் ஐபேட்களிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆப்பிள் டிஸ்ப்ளேவில் குவாசி மினி எல்.இ.டி. பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது வழக்கமான மினி-எல்.இ.டி.க்களில் பயன்படுத்தப்படுவதை விட பெரியதாகும்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த டிஸ்ப்ளேக்கள் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய டிஸ்ப்ளேவினை ஆப்பிள் தனது WWDC 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யலாம். இந்நிகழ்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி துவங்குகிறது.

புதிய ஐபேட் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் மினி-எல்.இ.டி. தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இவை முந்தைய ஆப்பிள் சாதனங்களில் இருந்ததை விட புதிய சாதனங்களின் டிஸ்ப்ளே தரத்தை அதிகளவு மேம்படுத்தும்.

இதுமட்டுமின்றி புதிய வகை டிஸ்ப்ளே வழக்கமான எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை விட சாதனத்தின் பேட்டரி செயல்திறனை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.