புதுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுர் அணியினர் பச்சை நிற ஜெர்சி அணிந்துள்ளனர். பசுமைக்கு ஆதரவாகவும், பிளாஸ்டிக் விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் அவர்கள் இந்த ஆடையை அணிந்திருக்கின்றனர். மொத்தம் 56 போட்டிகள் கொண்ட ஐ.பி.எல். தொடரில் இதுவரை 19 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

20ஆவது போட்டியில் கோக்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கப்பிட்டல்ஸ் அணி எதிர்கொள்கின்றன. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத கோக்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று வெற்றிப் பயணத்தை வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டொஸ் வென்ற டெல்லி கப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதையடுத்து, பெங்களுர் அணியில் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேலும், கப்டன் கோக்லியும் களம் கண்டனர். பெங்களுர் அணிக்கென்று எப்போதும் சிகப்பு நிற ஆடை உண்டு.

அனைத்து போட்டிகளிலும் அவர்கள் அந்த வண்ண ஆடை அணிந்தே விளையாடினர். ஆனால், இன்றைய போட்டியில் அதற்கு மாறாக… பச்சை நிற ஆடை அணிந்து பெங்களுர் அணியினர் களம் இறங்கியுள்ளனர்.

பசுமையை உணர்த்தும் வகையிலும், பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இன்று ஒருநாள் பச்சை வண்ண ஆடை அணிந்து விளையாட உள்ளதாக கப்டன் கோக்லி தெரிவித்தார். ஆட்டம் தொடங்கும் முன்பு, இரு அணி வீரர்களும் செடிகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

வெற்றி பெறுமா? சிகப்பு தொப்பி, காலில் சிகப்பு காலணி, பச்சை நிற ஆடை என்று பெங்களுர் அணி வீரர்கள் களம் கண்டுள்ளனர். ஆடை மாற்றமாவது…அந்த அணிக்கு வெற்றியை தருமா என்பது தெரியவில்லை.